உள்ளூர் செய்திகள்

டால்பின்நோஸ், லேம்ஸ் ராக் பகுதிகளில் செல்போன் டவர்கள் அமைக்க வேண்டும்

Published On 2023-08-06 14:38 IST   |   Update On 2023-08-06 14:38:00 IST
  • திடீரென இப்பகுதியில் இணைப்பு துண்டிக்கப்படுகிறது நெட்வொர்க் டவர் இல்லாதது இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
  • பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் பர்லியார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுற்றுலாத்தலங்களான டால்பின்நோஸ், லேம்ஸ் ராக் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதுதவிர பழங்குடியினர், தேயிலை தோட்ட தொழிலாளர்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செல்போன் கொண்டு செல்வோர் திடீரென இப்பகுதியில் இணைப்பு துண்டிக்கப்படுகிறது நெட்வொர்க் டவர் இல்லாதது இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இப்பகுதியில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. டவர் அமைப்பதற்கு இடத்தை கொடுக்க முன் வந்தும் எந்தவித நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படாதது வேதனை அளிப்பதாக உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அப்பகுதியில் செல்போன் டவர்களை அமைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் செல்போன் தொடர்பை விரைவாகப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News