உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தொடரும் செல்போன் திருட்டு

Published On 2023-07-09 05:31 GMT   |   Update On 2023-07-09 05:31 GMT
  • கடந்த சில நாட்களாகவே அரசு ஆஸ்பத்திரியில் ்நோயாளிகளின் பொருட்கள் அதிக அளவில் திருடுபோயி உள்ளது.
  • தொடர்ந்து உள்நோயாகளிடம் பணம், செல்போன் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகின்றனர்.மேலும் அங்கு தங்கி ஏராளமானோர் பல்வேறு பரிசோத னைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கிருக்கும் நோயாளிகளுக்கு உதவியாக அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தங்குகின்றனர். கடந்த சில நாட்களாகவே அரசு ஆஸ்பத்திரியில் ்நோயாளிகளின் பொருட்கள் அதிக அளவில் திருடுபோயி உள்ளது.மேலும் வெளி ஆட்களின் அட்டகாசத்தால் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக பைக் சாகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் குடிபோதையில் ரகளை செய்பவர்கள் தொல்லை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் காவலாளி தாக்கப்பட்டார்.

திண்டுக்கல் அருகே காமலாபுரம் சக்கைய நாயக்கனூரை சேர்ந்தவர் வேளாங்கண்ணி மகன் அருள் சகாயராஜ் (23). குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்த இவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் இவரது செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். தொடர்ந்து உள்நோயாகளிடம் பணம், செல்போன் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News