உள்ளூர் செய்திகள்
ஊரப்பாக்கம் அருகே வாலிபரிடம் கத்திமுனையில் செல்போன் பறித்த வாலிபர் கைது
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் திடீரென கத்திமுனையில் அருணிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி சென்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட துரைராஜ் என்பவரை கைது செய்தனர்.
ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி ஊராட்சி, கோகுலம்காலனி பகுதியை சேர்ந்தவர் அருண். உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர் காரணைப்புதுச்சேரி கூட்டுரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென கத்திமுனையில் அருணிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி சென்றனர். அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்துதப்பிச் சென்றனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சென்னை, பெசன்ட் நகர் அடுத்த திடீர் நகரைச் சேர்ந்த துரைராஜ் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.