உள்ளூர் செய்திகள்

பழனி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையம்.

செல்போனுக்கு தடை விதிப்பு : பழனி கோவிலில் 11 இடங்களில் உதவி மையங்கள் அமைப்பு

Published On 2023-10-21 05:51 GMT   |   Update On 2023-10-21 05:51 GMT
  • பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கோ விலுக்கு செல்போன், கேமரா கொண்டு வர தடை விதிக்கப்பட்டது.
  • 11 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு அதிகாலை முதல் இரவு வரை ஒரு காவலர் நிறுத்தப் பட்டுள்ளார்.

பழனி:

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இவ்வாறு வரும் பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா மூலம் மலைக்கோவிைல படம் பிடிப்பதுடன் மூலவருக்கு நடைபெறும் பூஜைகளையும் வீடியோவாக எடுத்து சமூக வலைத ளங்களில் வெளியிட்டு வந்தனர்.

இதனையடுத்து மலை க்கோவிலில் செல்போன், கேமரா பயன்படுத்துவை தடுக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 1ந் தேதி முதல் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கோ விலுக்கு செல்போன், கேமரா கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. இவற்றை பாதுகாக்க அடிவாரம், படிப்பாதை பகுதியில் மையங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களிடம் இருந்து செல்போன் வாங்கப்பட்டது.

இதனால் மலைக்கோவிலில் செல்போன் பயன்பாடு பெரும்பாலும் குறைந்தது. இதனிடையே கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடன் வரும் நபர் காணாமல் போய்விட்டால் அவரை கண்டுபிடிக்க, தொடர்பு கொள்ள சிரமப்பட்டு வந்தனர்.

இதனை போக்கும் வகையில் படிப்பாதை முதல் மலைக்கோவில் வரை 4 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்ப ட்டது. அங்கு ஒரு காவலர் பணியமர்த்தப்பட்டு வாக்கி டாக்கி மூலம் தொடர்பு கொண்டு பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தந்து வருகிறார். தற்போது மேலும் சில இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

11 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு அதிகாலை முதல் இரவு வரை ஒரு காவலர் நிறுத்தப்பட்டுள்ளார். பக்தர்களுக்கு தேவைப்படும் உதவியை அவரிடம் தொடர்பு கொண்டு தெரி வித்தால் அதனை நிறை வேற்றி வருகின்றனர். இந்த நடைமுறை பக்தர்களி டம் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News