உள்ளூர் செய்திகள்

கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சி.

ஆத்தூர் அருகே கடைக்குள் புகுந்து செல்போன், மோட்டார்சைக்கிள் திருட்டு

Published On 2022-06-16 14:42 IST   |   Update On 2022-06-16 14:42:00 IST
ஆத்தூர் அருகே கடைக்குள் புகுந்து செல்போன், மோட்டார்சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர் ஆசாமிகள் அட்காசம் செய்தனர்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் ராமர் கோவில் தெருவை சேர்ந்த கருப்பண்ணன் மகன் விக்னேஷ். இவர் செல்லியம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே முட்டை கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவரது கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் பணிகளை முடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலையில் அவர்கள் அயர்ந்து தூங்கும்போது மர்மநபர் அங்கு வந்தார். அவர்

கடைக்கு உள்ளே புகுந்து சாவியை எடுத்து கடைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளையும், செல்போனையும் நைசாக திருடி சென்றார்.

இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகினது.

அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசார் இருசக்கர வாகனத்தை தேடிச்சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News