உள்ளூர் செய்திகள்

உரக்கடை அதிபரை தாக்கிய போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2022-06-10 05:33 GMT   |   Update On 2022-06-10 05:33 GMT
  • இரவு 10 மணிக்கு கோபிநாத் வீட்டுக்கு அருகே விக்னேஷ் என்ற வாலிபர் செல்போனில் பேசி கொண்டு இருந்தார்.
  • அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் கோபிநாத் மனைவி சாந்தினிக்கு போன் செய்து ஒரு வாலிபர் இங்கு நின்று போன் பேசி கொண்டு இருக்கிறார். இதனால் பயமாக உள்ளது என கூறினார்.

சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பாண்டியன் வீதியை சேர்ந்தவர் கோபிநாத் (38). இவர் சென்னிமலை பஸ் நிலையம் அருகே உரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இரவு 10 மணிக்கு அவரது வீட்டுக்கு அருகே விக்னேஷ் என்ற வாலிபர் செல்போனில் பேசி கொண்டு இருந்தார். இதை கண்ட அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் கோபிநாத் மனைவி சாந்தினிக்கு போன் செய்து ஒரு வாலிபர் இங்கு நின்று போன் பேசி கொண்டு இருக்கிறார். இதனால் பயமாக உள்ளது என கூறினார்.

இது குறித்து சாந்தினி தனது கணவர் கோபிநாத்திடம் கூறினார். இதையடுத்து கோபிநாத் அங்கு சென்று போன் பேசி கொண்டு இருந்த விக்னேஷ் என்பவரிடம் இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறீர்கள் யாரிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருக்கிறீ ர்கள். நீங்கள் யார்? என கேட்டுள்ளார்.

அப்போது விக்னேசுக்கும் கோபிநாத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து விக்னேஷ் அங்கிருந்து சென்று விட்டார். சிறிது நேரத்துக்கு பிறகு விக்னேஷ் தனது நண்பர்களான திருப்பூர் ரெயில்வே போலீஸ்காரர் சரவணன், விக்னேஷின் அண்ணன் கண்ணன் ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

இதைத் தொடர்ந்து போலீஸ்காரர் சரவணன் கோபிநாத்திடம் மீண்டும் தகராறு செய்தார். இதை யடுத்து அவர்கள் 3 பேரும் சேர்ந்து கோபிநாத்தை கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கோபிநாத் சென்னிமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டார்.

இது குறித்து கோபிநாத் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ்காரர் சரவணன், விக்னேஷ். கண்ணன் ஆகிய 3 பேர் மீதும் கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News