உள்ளூர் செய்திகள்

பிரம்மதேசம் அருகே நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

Published On 2023-06-25 06:37 GMT   |   Update On 2023-06-25 06:37 GMT
  • நிலத்தில் இருந்த வரப்பை சீர் செய்து கொண்டிருந்தார்.
  • 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

விழுப்புரம்:

மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் ஓமிப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 42). விவசாயி. இவர் கடந்த 22-ந்தேதி தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த வரப்பை சீர் செய்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து நிலத்தின் உரிமையாளர் செல்வம் (57) மோகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த வர்கள் இருவரை யும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த செல்வம் நடந்தவைகளை குடும்பத்தா ரிடம் கூறினார். இதில் ஆத்திரமடைந்த அவரது மனைவி வெண்ணிலா, மகன்கள் ஆனந்து, அரி மற்றும் உறவினர்கள் செல்வத்தை மோகன் வீட்டிற்கு அழைத்து சென்று தகராறில் ஈடுபட்டனர்.

இதில் செல்வம் குடும்பத்தார் மோகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மோகன் புதுவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவரது வீட்டிலிருந்த பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பான புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.

Tags:    

Similar News