உள்ளூர் செய்திகள்

நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமையில் மருத்துவ முகாம் நடந்தபோது எடுத்தபடம்.

புற்றுநோய் தடுப்பு மற்றும் மருத்துவ முகாம்

Published On 2022-12-12 09:16 GMT   |   Update On 2022-12-12 09:16 GMT
  • நகராட்சி துாய்மை பணியாளா்களுக்கு சிறப்பு புற்றுநோய் தடுப்பு மற்றும் மருத்துவ முகாம் நடந்தது
  • பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டது.

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி மற்றும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் நகராட்சி துாய்மை பணியாளா்களுக்கு சிறப்பு புற்றுநோய் தடுப்பு மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். ஆணையாளா் (பொறுப்பு) ஜெயப்பிரியா, சுகாதார ஆய்வாளா் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார அலுவலா் பழனிச்சாமி வரவேற்று பேசினார். அதனைத்தொடா்ந்து தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னா் பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டது. மேலும் அனுமதியின்றி கொட்டப்பட்ட கட்டுமான மற்றும் இடிபாடு கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யபட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு புற்றுநோய் தடுப்பு மற்றும் மருத்துவ முகாமை நடமாடும் அடையார் புற்றுநோய் மருத்துவமனை - நெல்லை புற்றுநோய் மருத்துவ மையம் இணைந்து மருத்துவர் மற்றும் செவிலியர் குழு மூலம் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தனியார் தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தன்னார்வலர்கள், சுய உதவி குழுக்கள், டிபிசி பணியாளர்கள், மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News