பழுதான உயர்கோபுர மின்விளக்கு.
செங்கோட்டையில் பழுதான உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்கப்படுமா?
- சில மாதங்களுக்கு முன்பு உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.
- வெளிச்சம் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
செங்கோட்டை:
செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே கொல்லம், குண்டாறு அணை,தென்காசி பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் பிரியும் இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொது மக்களின் பயன்பாட்டிற்காக உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியினர், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலை யில் தற்போது அந்த உயர்கோபுர மின்விளக்கு பழுத டைந்துள்ளது.
இதனால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். மேலும் வெளிச்சம் இல்லாத காரணத்தால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்து காணப்படும் உயர்கோபுர மின்விளக்குகளை உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகள் சிரமைக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.