உள்ளூர் செய்திகள்

நடமாடும் எக்ஸ்ரே வாகன மூலம் காச நோய் சென்று மருத்துவ பரிசோதனை

Published On 2022-06-30 10:08 GMT   |   Update On 2022-06-30 10:08 GMT
  • நடமாடும் எக்ஸ்ரே வாகன மூலம் காச நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவ பரிசோதனை அதிகாரி தகவல் தெரிவித்தனர்.
  • காசநோய் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

சேலம்:

சேலம் அருகே அயோத்தியாபட்டணத்தில் ஊராட்சித் தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கான காசநோய் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

காரிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் கவிதா தலைமை தாங்கினார். காசநோய் பிரிவு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜா கலந்து கொண்டு காச நோயின் அறிகுறிகள், அவை பரவும் விதம், தடுக்கும் முறைகள் சிகிச்சைகள் குறித்து பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் புதிதாக முதல் அமைச்சரால் வழங்கப்பட உள்ள நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவியுடன் கூடிய வாகனங்களின் மூலம் நோயாளிகளின் இருப்பிடத்திற்கு சென்று எக்ஸ்ரே எடுப்பதுடன் பரிசோதனை முடிவினை துரிதமாக அறிந்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்றார்.

பின்னர் பஞ்சாயத்து தலைவர்களுக்கு தங்கள் பகுதியில் காசநோய் விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரைய அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுசீந்திரன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் பிரபாகரன், குமரேசன் மற்றும் அலுவலர்கள் சதாசிவம், கிருஷ்ண முருகேஷ், சென்னகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News