உள்ளூர் செய்திகள்

ஏரியின் நடுவில் அமைக்கப்பட்ட கரை. 

விவசாயிகள் எதிர்ப்பால் ஏரியின் நடுவில் மீன்பிடிக்க குத்தகைதாரர் அமைத்த கரை அகற்றம்

Published On 2022-08-25 15:19 IST   |   Update On 2022-08-25 15:19:00 IST
  • ஏரியில் நீர் குறைந்து வரும் நிலையில், ஏரியிலுள்ள அனைத்து மீன்களையும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கனரக பொக்லைன் எந்திரத்தை வைத்து ஏரியின் நடுவில் நீண்ட கரை அமைத்து வருகிறார்.
  • அங்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி புதியதாக உருவாக்கப்பட்ட கரையை அகற்ற உத்தரவிட்டனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வலசைகவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட ஜிம்மாண்டியூர் ஏரி சுமார் 28 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்த ஏரி கடந்த வடகிழக்கு மற்றும் பருவ மழையால் நிரம்பியது. இதனை அடுத்து ஊர் முக்கியஸ்ர்கள் முன்னிலையில் மீன்பிடி குத்தகை ஏலம் விடப்பட்டது.

விக்கினம்பட்டி கிராமத்தை சேர்ந்த குமரேசன் என்பவர் ஒரு வருடத்திற்கான மீன் குத்தகை ரூ.68,000-த்திற்கு ஏலம் எடுத்தார்.

ஏரியில் நீர் குறைந்து வரும் நிலையில், ஏரியிலுள்ள அனைத்து மீன்களையும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கனரக பொக்லைன் எந்திரத்தை வைத்து ஏரியின் நடுவில் நீண்ட கரை அமைத்து வருகிறார்.

இந்நிலையில் அங்கு சென்ற விவசாயிகள் மற்றும் கிராம இளைஞர்கள், புதிய கரைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி புதியதாக உருவாக்கப்பட்ட கரையை அகற்ற உத்தரவிட்டனர்.

அனுமதி பெறாமல் ஏரிக்குள் கனரக பொக்லைன் எந்திர உதவியுடன் ஏரியின் நடுவில் கரை கட்டிய மின் பிடி குத்தகைதாரர் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News