உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்டம் நாகாவதி அணையில் உள்ள ஷட்டர் உடைந்ததால் தண்ணீர் வீணாவது குறித்து மாலை மலரில் செய்தி வெளியானது. இந்நிலையில் அந்த அணையில் புதிதாக பொருத்துவதற்கு ஷட்டர்கள் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளதை படத்தில் காணலாம். 

மாலைமலர் செய்தி எதிரொலியால் நாகாவதி அணையில் ஷட்டர் புதுப்பிக்கும் பணி தொடக்கம்

Published On 2022-08-06 13:53 IST   |   Update On 2022-08-06 13:53:00 IST
  • 1,993 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது.
  • அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள நாகாவதி அணையின் கொள்ளவு 24 அடி. இந்த அணை கடந்த 1987-ம் ஆண்டு 313 லட்சம் ரூபாய் மதிப்பில் தமிழக அரசால் கட்டப்பட்டது. இந்த அணையை நம்பி பெரும்பாலை, சாமதாள், அரகானஅள்ளி, சிடுவம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்ட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 1,993 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது.

இங்கு ராகி, சாமை, கரும்பு, நெல், கடலை, சோளம், மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருpகின்றனர். அது மட்டுமல்லாது அணையை நம்பி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கால்நடைகள் வளர்ப்பு, மீன் பிடி தொழிலில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த அணை நிரம்பும் சமயத்தில் அங்குள்ள வடது மற்றும் இடது கால்வாய் வழியாக விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக அணை நிரம்பாததால் அணையின் பாசன வசதி இல்லாமல் விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாக மாறியது. இதனால் விவசாயத்தை நம்பியிருந்த விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பிழைப்பு தேடி அண்டை மாநிலம் மற்றும் அண்டை மாவட்டங்களுக்கு கூலி வேலைக்கு சென்ற நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக நாகாவதி அணை தனது முழுகொள்ளவை எட்டியது. இதனால் பொது பணி துறையினர் கடந்த மே மாதம் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டனர்.

இந்நிலையில் ஷட்டர் சரியாக பராமரிக்கபடாததால் உடைப்பு ஏற்பட்டு அணையில் இருந்த தண்ணீர் முழுவதும் வீனாக சென்று விட்டது. அணையில் இருந்த ஷட்டரை எடுத்து அணையின் நடை பாதையில் பொது பணி துறையினர் வைத்திருந்தனர். உடைந்து போன ஷட்டரை பொது பணி துறையினர் சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மாலை மலரில் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். உடைந்த ஷட்டர்களுக்கு பதிலாக புதிய ஷட்டர்களை கொண்டு வந்துள்ளனர்.அவற்றை பொருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News