உள்ளூர் செய்திகள்

பஸ் ஊழியர்கள் சங்க முத்தரப்பு பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு

Published On 2023-06-08 10:36 GMT   |   Update On 2023-06-08 10:36 GMT
  • தொழிலாளர் நலத்துறை , போக்குவரத்து துறை அதிகாரிகள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
  • 4-வது கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறுவதாக இருந்தது.

சென்னை:

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்த கூடாது , காலி பணியிடங்களில் நிரந்தர பணியாளர்களையே நியமிக்க வேண்டும், பஸ்களை தனியார் மயமாக்ககூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கம் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்திருந்தது.

இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை , போக்குவரத்து துறை அதிகாரிகள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

இதைத் தொடர்ந்து 4-வது கட்ட பேச்சுவார்த்தை நாளை (9-ந்தேதி) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த பேச்சுவார்த்தை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அதில் அனைத்து கூட்டமைப்பு தொழிற்சங்கங்களும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அன்றையதினம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா? என்பது தெரியவரும்.

Tags:    

Similar News