உள்ளூர் செய்திகள்

பாலக்கோட்டில் ஆமை வேகத்தில் நடைபெறும் பஸ் நிலைய சீரமைப்பு பணிகள்

Published On 2023-09-27 15:28 IST   |   Update On 2023-09-27 15:28:00 IST
  • பாலகோட்டில் ஆமை வேகத்தில் நடைபெறும் பஸ் நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
  • பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதி

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலைய சீரமைப்பு பணிகளை செய்ய கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புதிய தரைதளம் அமைக்க ரூ. 83 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்திற்க்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து ஏப்ரல் 24- ந்தேதி புதிய தரைத்தளம் அமைக்கும் பணி துவங்கப்பட்ட நிலையில் தற்போது புறநகர் பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் தரைத்தளத்தை ஜே.சி.பி இயந்திரம் மூலம் வெட்டி எடுக்கப்பட்டது.

ஜல்லி கற்களை கொட்டப்பட்டு தற்போது வரை சமன் செய்யப்பட்ட நிலையிலே உள்ளது. பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் ஆரம்ப கட்ட பணிகள் முடிந்த நிலையில் நகர பஸ் நிலைய முழு சீரமைப்பு பணிகள் நடைபெறாமல் நீண்ட நாட்கள் கடந்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெ றுவதால் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் நடைபாதை வியாபாரிகள் பொது மக்கள் மற்றும் பள்ளி ,கல்லூரி மாண வர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் .

மேலும் ஒப்பந்ததாரரின் வேலை சுணக்கத்தால் தினந்தோறும் பாலக்கோடு பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் 200-க்கும் மேற்பட்டவை மற்றும் ஆட்டோக்கள் பஸ் நிலையத்தில் வெளியே நிறுத்த வேண்டி இருப்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறி வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து விரைந்து நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணி களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News