உள்ளூர் செய்திகள்

போட்டியில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை படத்தில் காணலாம்.

கூடலூரில் கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

Published On 2022-09-28 10:36 IST   |   Update On 2022-09-28 10:36:00 IST
  • கூடலூர் கிழக்கு முத்தாலம்மன் கோவில் திருவிழாவை யொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் இன்று காலை நடந்தது.
  • நெடுஞ்சாலையில் மாட்டு வண்டிகள் உடன் சீறிப்பாய்ந்த காளைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் கிழக்கு முத்தாலம்மன் கோவில் திருவிழாவை யொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் இன்று காலை நடந்தது.

முன்னதாக போட்டியில் பங்கேற்க இருந்த காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு கூடலூர் பைபாஸ் சாலையில் இருந்து போட்டி தொடங்கியது. தேன் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் மாடு, நடு மாடு, பெரிய மாடு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது.

இதில் திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 190 பேர் மாட்டு வண்டி காளைகளுடன் போட்டியில் பங்கேற்றனர். காளைகளின் வயது, தூரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு தொகை, கேடயங்கள் வழங்கப்பட்டது. அதன்படி மொத்தம் 15 பேர் பரிசுகள் பெற்றனர்.

குறிப்பாக பெரிய மாடு பிரிவுக்கு அதிகபட்ச தூரமாக கூடலூரில் இருந்து லோயர் கேம்ப் பென்னிகுயிக் மணிமண்டபம் வரை நிர்ணயிக்கப்பட்டது. முதல்பரிசு ரூ. 50 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ. 40 ஆயிரமும், 3-ம்பரிசு ரூ 30 ஆயிரமும் வழங்கப்பட்டது. கூடலூர் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மாட்டு வண்டிகள் உடன் சீறிப்பாய்ந்த காளைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.


Tags:    

Similar News