உள்ளூர் செய்திகள்

திருட்டு நடந்த வீட்டில் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்.

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு

Published On 2023-06-10 15:30 IST   |   Update On 2023-06-10 15:30:00 IST
  • இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
  • உள்ளே சென்று பார்க்கும் போது நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த உத்தமதானபுரம் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 40).

இவர் மனைவி சாந்தி (38), குழந்தையுடன் வசித்து வருகிறார்.

சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை மனோகரன், மனைவி சாந்தியுடன் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக வெளியே சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

பின், பீரோவில் இருந்த 6 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பி ஓடினர்.

பின்னர், மனோகரன் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்க்கும் போது நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

தகவலறிந்த வலங்கமான் இன்ஸ்பெக்டர் ராஜா, சிறப்பு பிரிவு போலீஸ் அறிவழகன் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News