உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் மாவட்டம், ஆயந்தூர் ஊராட்சியில் காலை உணவு வழங்கும் பொருட்டு முன்னோட்டமாக தயாரிக்கப்பட்ட உணவின் சுவை மற்றும் தரத்தினை மாவட்ட கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் காலை உணவு திட்ட பணிகள்: மாவட்ட கலெக்டர் ஆய்வு

Published On 2023-08-22 07:35 GMT   |   Update On 2023-08-22 07:35 GMT
  • காலை உணவின் சுவை மற்றும் தரத்தினை மாவட்ட கலெக்டர் பழனி, ஆய்வு செய்தார்.
  • ஊரகப்பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் காலை உணவு திட்டம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியம், ஆயந்தூர் ஊராட்சியில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கும் பொருட்டு, முன்னோட்டமாக தயாரிக்க ப்பட்ட காலை உணவின் சுவை மற்றும் தரத்தினை மாவட்ட கலெக்டர் பழனி, ஆய்வு செய்தார். அவர் பேசியதாவது, 

காலை உணவு திட்டம், அறிவித்து, முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் தொடக்கி வைத்து, செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது, 2-ம் கட்டமாக அனைத்து ஊரகப்பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு திட்டம் ஆகஸ்ட் 25-ந்தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. மேலும், மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் உள்ள 988 பள்ளிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 32 பள்ளிகள் என மொத்தம் 1020 பள்ளிகளில் முன்னோட்டமாக காலை உணவு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் உணவினை உண்டு சுவை மற்றும் தரத்தினை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார்.

Tags:    

Similar News