உள்ளூர் செய்திகள்

குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா.

அண்ணன் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

Published On 2022-10-05 09:52 GMT   |   Update On 2022-10-05 09:52 GMT
  • சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை வழிபாடு நடைபெற்று வருகிறது.
  • பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவ ட்டம், சீர்காழி அடுத்த திருவெள்ளக்குளம் கிராமத்தில் 108 வைணவ தலங்களில் 39-வது திவ்யதேசமான, குமுதவல்லி தாயார் சமேத அண்ணன் பெருமாள் கோவில் உள்ளது.

குமுதவள்ளி தாயார் அவதரித்த இத்தலத்தில் அண்ணன் பெருமாளை வேண்டி திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் பாடி மங்களாசாசணம் செய்துள்ளார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் திருப்பதியை போன்று புரட்டாசி மாதம் 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் பெருமாள் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை வழிபாடு நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது.

முன்னதாக பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று, ஆபரணங்கள், மலர்கள் கொண்டு அலங்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News