உள்ளூர் செய்திகள்

மயிலாப்பூரில் காற்றாடி பறக்கவிட்ட சிறுவன்: மாடியில் இருந்து கீழே விழுந்து முகத்தில் காயம்

Published On 2023-03-19 16:33 IST   |   Update On 2023-03-19 16:33:00 IST
  • 15 அடி உயரத்தில் இருந்து அவன் திடீரென தவறி தலைகுப்புற விழுந்தான்.
  • மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை:

சென்னை மயிலாப்பூர் மீனாம்பாள்புரத்தில் வசித்து வரும் 11 வயது சிறுவன் முகேஷ் சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

தந்தையை இழந்த நிலையில் தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த முகேஷ் வீட்டின் மொட்டை மாடியில் நின்றுகொண்டு காற்றாடியை பறக்கவிட்டான். அப்போது 15 அடி உயரத்தில் இருந்து அவன் திடீரென தவறி தலைகுப்புற விழுந்தான்.

இதில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தாடை கிழிந்து தொங்கி ரத்தம் வழிந்தோடியது. இதையடுத்து சிறுவனின் சித்தப்பா சசிகுமார் உடனடியாக முகேசை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு 8 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News