பஞ்சாயத்து தலைவி அனுராதா ரவிமுருகன் இளம் வாக்காளருக்கு விண்ணப்பம் வழங்கிய காட்சி.
கீழநத்தத்தில் இளம் வாக்காளர்களுக்கு பூங்கொத்து
- கே.டி.சி. நகர் சமுதாய நலக்கூடத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
- முகாமிற்கு மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல வசதிகளை செய்து கொடுக்கப்பட்டது.
நெல்லை:
பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சி கே.டி.சி. நகர் சமுதாய நலக்கூடத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை பாளை மத்திய ஒன்றிய தி.மு.க. துணைச் செயலாளரும், நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணைச் செயலாளரும், கீழநத்தம் ஊராட்சி மன்ற தலைவருமான அனுராதா ரவிமுருகன் பார்வையிட்டார்.
அப்போது மாற்றுத்திறனாளிகள் அங்கு வந்து செல்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தார். மேலும் ஆர்வத்துடன் கலந்து கொண்ட புது வாக்காளர்களுக்கு பூங்கொத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பாளை மத்திய ஒன்றிய ஆதிராவிடர் நல அமைப்பாளர் செல்லப்பா, மீனவர் அணி அமைப்பாளர் நெல்லையப்பன், காங்கிரஸ் அமைப்பாளர் ஜோஸ்லின், இளைஞர் அணி ஆதி, தலையாரி வேல்பாண்டி, பணித்தள பொறுப்பாளர் சோபனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.