உள்ளூர் செய்திகள்

செல்போன் டவர் அமைக்க பூமிபூஜை போடப்பட்டது.

நத்தம் அருகே செல்போன் டவர் அமைக்க பூமிபூஜை

Published On 2023-10-05 09:50 IST   |   Update On 2023-10-05 09:50:00 IST
  • பெரியமலையூரில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய பி.எஸ்.என்.எல் செல்போன் டவர் அமைப்பதற்கான பூமிபூஜை நடந்தது.
  • தொடர்ந்து வலசு பகுதியில் புதிய ரேசன் கடையை அவர் திறந்து வைத்து பொது மக்களுக்கு பொருட்களை வழங்கி பேசினார்.

நத்தம்:

நத்தம் அருகே குட்டுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெரியமலையூரில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய பி.எஸ்.என்.எல் செல்போன் டவர் அமைப்பதற்கான பூமிபூஜை நடந்தது.

முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம் தலைமை தாங்கினார். தாசில்தார் ராமையா, வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பழனிச்சாமி, யூனியன் ஆணையாளர்கள் சுமதி, பத்மாவதி, ஊராட்சி மன்ற தலைவர் அழகம்மாள் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேலுச்சாமி எம்.பி. பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து வலசு பகுதியில் புதிய ரேசன் கடையை அவர் திறந்து வைத்து பொது மக்களுக்கு பொருட்களை வழங்கி பேசினார். இதில் மாவட்ட பிரதிநிதி அழகர்சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் மணி, வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா, நத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News