உள்ளூர் செய்திகள்

மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளில் தளவாட பொருட்களை ஏற்றும் மீனவர்கள்.

விசைப்படகு மீனவர்கள் 17-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்

Published On 2023-06-15 09:42 GMT   |   Update On 2023-06-15 09:42 GMT
  • விசைப்படகுகள் திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் தான் கடலுக்கு செல்ல முடியும்.
  • கடலுக்கு செல்வதற்காக தளவாட பொருட்களை ஏற்றி மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசைப்படகுகள் உள்ளது.

இந்த விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ந்தேதி முதல் ஜூன் 14 ந்தேதி முடிய மீன்கள் இனப்பெருக்க காலமாக கண்க்கிடபட்டு விசைப்படகுகள் மீன் பிடி தடைகாலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடைக்காலத்தை பயன்படுத்தி விசைப்படகு கள் கரைக்கு ஏற்றி மராமத்து செய்யப்பட்டு புதிய வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்றது.

மீன்பிடி வலைகள் சரிபார்க்கப்பட்டது.

ஜூன் 14 புதன்கிழமை நேற்றுடன் தடைகாலம் நிறைவடைந்தா லும் இன்று(வியாழக்கிழமை) என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல முடியாது.

விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு புரிந்துணர்வு ஒப்பந்தப்படி வாரத்தில் திங்கள்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களில் தான் கடலுக்கு செல்ல முடியும்.

எனவே வருகிற 17-ந்தேதி சனிக்கிழமை அதிகாலை கடலுக்கு செல்வதற்காக விசைப்படகுகளில் டீசல் நிரப்புதல் மற்றும் மீன் பிடி வலை உள்ளிட்ட தளவாட பொருட்களை ஏற்றி மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

இதனால் தடைகாலம் முடிந்தும் கூடுதலாக 2 நாள்கள் சேர்த்து 63 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவ ர்கள் கடலுக்கு மீன்பிடிக்க தயாராகி வருகின்றனர்.

Tags:    

Similar News