உள்ளூர் செய்திகள்

நெல்லையில் விஜய் மக்கள் இயக்க தொண்டரணி சார்பில் ரத்ததானம் வழங்கப்பட்ட காட்சி. அருகில் மாவட்ட தொண்டரணி தலைவர் ஜாகீர் உசேன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

விஜய் பிறந்நாள் கொண்டாட்டம்- நெல்லையில் தொண்டரணி சார்பில் ரத்ததான முகாம்

Published On 2022-06-22 09:22 GMT   |   Update On 2022-06-22 09:22 GMT
  • நெல்லையப்பர் கோவில், சாலைக்குமாரர் கோவில், மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்டகணபதி விநாயகர் கோவில்களில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
  • சிறப்பு அழைப்பாளராக ராம் சினிமாஸ் உரிமையாளர் ராமசாமி ராஜா கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடக்கி வைத்தார்.

நெல்லை:

நடிகர் விஜய் 48-வது பிறந்தநாள் இன்று கொண்டா டப்பட்து. இதை முன்னிட்டு மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின் படி நெல்லை மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று இருக்கன்குடி மாரியம்மன் கோவில், நெல்லையப்பர் கோவில், சாலைக்குமாரர் கோவில், மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்டகணபதி விநாயகர் கோவில்களில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் அங்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து ரத்ததான முகாம் ராம் சினிமாஸ் வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு நெல்லை மாவட்ட தொண்டரணி தலைவர் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ராம் சினிமாஸ் உரிமையாளர் ராமசாமி ராஜா கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் கார்த்திகேயன் பெருமாள், ஜோசப் ரத்தீஷ், திருக்குமரன், மெட்டி சரவணன், ரமேஷ், மைதீன், சிந்து டேனியல், மகாராஜா, பேட்டை பீர், பழனிவேல், அண்டோவளன், திம்மை கார்த்திக், கிங்ஸ்டன், கணேஷ், அய்யப்பன், தளபதி அரவிந்த், சுரேஷ், சிவந்தி விஜய் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நெல்லை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.தொடர்ந்து முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம், மனவளர்ச்சி குன்றியோர், ஆதரவற்றவர்களுக்கும் உணவு வழங்கப்படடது. மேலும் பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், பென்சில், பேனா வழங்கப்பட்டது. முன்கள பணியாளர்களுக்கு அரிசி, பெண்களுக்கு சேலைகள், ஏழை மாணவியின் கல்விக்கு காசோலை வழங்குதல் உள்ளிட்டவை நெல்லை மாவட்ட தலைமை தொண்டரணி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News