உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.

வள்ளியூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் ரத்ததான முகாம்

Published On 2023-04-07 08:44 GMT   |   Update On 2023-04-07 08:44 GMT
  • முகாமை புனித பாத்திமா அன்னை பேராலய பங்குத்தந்தை ஜான்சன் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.
  • இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

வள்ளியூர்:

வள்ளியூர் புனித பாத்திமா அன்னை பேராலயத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பேராலய வின்சென்ட் தி பவுல் சபை மற்றும் வள்ளியூர் லயன்ஸ் கிளப் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நடைபெற்றது. புனித பாத்திமா அன்னை பேராலய பங்குத்தந்தை ஜான்சன் தலைமை தாங்கி ஜெபம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். லயன்ஸ் கிளப் தலைவர் ஜான் வின்சென்ட், செயலாளர் எட்வின் ஜோஸ், பொருளாளர் டாக்டர் ஜார்ஜ் திலக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் தலைவர் ஜான் வின்சென்ட் வரவேற்றார். நெல்லை மருத்துவக் கல்லூரி ரத்ததான முகாம் குழு மருத்துவர்கள் ரவிசங்கரன், மணிமொழி, திருவேங்கடம், ஆய்வக நுட்புனர் ஆதிமூலகிருஷ்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் சுமார் 50-க்கும் மேற்பட்ட யூனிட் ரத்தம் பெற்றுக் கொண்டனர்.

வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் ஜெகதீசன், வாசகன், ராஜவேலு, சசிகுமார், அன்னை தெரசா ரத்ததான இயக்க தலைவர் ரீகன் மற்றும் பிற ரத்ததான அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் டாக்டர் ஜார்ஜ் திலக் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வள்ளியூர் லயன்ஸ் கிளப் குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News