உள்ளூர் செய்திகள்

சாலையை கடக்கும்போது அதிவேகமாக மோதிய பைக்- சுருண்டு விழுந்த காவலர்

Update: 2022-12-01 11:51 GMT
  • இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.
  • செங்கல்பட்டு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே சாலையை கடக்க முயன்ற காவலர் கார்த்திகேயன் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் அந்த காவலர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அதேபோல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பொத்தேரி தனியார் கல்லூரியில் படிக்கும் வெங்கட் மற்றும் அவரது நண்பர் சூர்யா என்பது தெரியவந்தது. காயமடைந்த மூவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செங்கல்பட்டு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News