சாலை பணிக்கான பூமிபூைஜயை சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேமநாத் தொடங்கி வைத்த காட்சி.
சூளகிரி பகுதியில் ரூ.41.50 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
- பல வருடங்களாக இந்த சாலை குண்டும் குழியுமாக இருந்து வருகிறது.
- சாலையை ஆய்வு செய்து பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து பின்னர் உடனடியாக புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா வேப்பன–அள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியம் பஸ்தல்பள்ளி ஊராட்சி முடிபிநாயக்கன் பாளையம் முதல் திம்மராய–சாமி கோவில் வரை சுமார் 2 கி.மீ. தொலைவில் ரூ.41.50 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பல வருடங்களாக இந்த சாலை குண்டும் குழியுமாக இருந்து வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த ஒன்றிய குழு தலைவர், அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று சாலையை ஆய்வு செய்து பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து பின்னர் உடனடியாக புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த சாலை அமைக்க நடவடிக்கை எடுத்த ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும், அதி–காரிகளுக்கும், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் டென்சிங், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராஜப்பன், ஒன்றி்ய குழு உறுப்பினர் காஞ்சனா பழனி, ஒன்றியக் குழு உறுப்பினர் ராதா–கிருஷ்னண், ஊராட்சி மன்ற துணை தலைவர் சரஸ்வதி திம்மராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதேஷ், செல்வராஜ், ஊர் கவுண்டர் ரங்கநாதன், முனிகிருஷ்னா, சிவகுமார், சுவாமி மூர்த்தி, சண்முகம், சின்னபையன் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.