ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
பிக்கிலி பஞ்சாயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- தருமபுரி அருகே மார்க்சிஸட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
- பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பிக்கிலி பஞ்சாயத்தில் 100 நாள் வேலை மற்றும் இலவச வீடு வழங்கும் திட்டம் ஆகியவற்றில் நடந்த முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கொல்லப்பட்டியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் சின்னசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ராதிகா அன்பரசு முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விசுவநாதன், பகுதி குழு செயலாளர் சின்னசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பஞ்சாயத்தில் நடைபெறும் நூறுநாள் வேலைத்திட்டத்தில் நிதி முறைகேடு, நூறுநாள் வேலைத்திட்ட பெண் தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்துவது , பிரதமர் இலவச வீடு திட்டத்தில் பயனாளிகளிடம் லஞ்சம் பெற்று முறைகேட்டில் ஈடுபடுவது, வெட்டாத பண்ணைக்குட்டைக்கு பணம் எடுத்தது உள்ளிட்டவை குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, அங்கன்வாடி கட்டிடம், வெள்ளத்தால் சேதமடைந்த ஆற்றுப் பாலத்தை சீரமைத்தல் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பகுதி குழு உறுப்பினர்கள் சின்னராஜ், சிலம்பரசன், செல்வராஜ், வேலாயுதம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சண்முகம் நன்றி கூறினார்.