உள்ளூர் செய்திகள்

மாணவி அகஸ்திக்கு சிறந்த இயக்குனருக்கான விருதை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் வழங்கினார்.

பள்ளி மாணவிக்கு சிறந்த இயக்குனருக்கான விருது

Published On 2023-10-16 10:21 GMT   |   Update On 2023-10-16 10:21 GMT
  • தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
  • ‘குண்டான் சட்டி’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி உள்ளார்.

கும்பகோணம் அடுத்த கொரநாட்டுகருப்பூரில் உள்ள கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் அகஸ்தி (வயது 12) என்ற மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் மாற்றுத்திறனாளி மாண வனின் குறும்புத்தனம், கேலி செய்யும் விதம், அவர்களின் தனி திறமையை பிரதிபலிக்கும் வகையில் 'குண்டான் சட்டி' என்ற அனிமேஷன் படத்தை இயக்கி உள்ளார்.இந்த படமானது மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் வளர்க்கும் சிறந்த படமா கவும், மாணவர்களின் தனித்துவம் மேன்மை அடையும் வகையிலும் அமைந்துள்ளது.

இந்த படத்தை பாராட்டி தனியார் பள்ளிகள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி கழகம் ஆனது சிறந்த இயக்குனருக்கான விருதை மாணவிக்கு வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விருதை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், மாணவி அகஸ்திக்கு வழங்கினார்.

விருதை பெற்று க்கொண்ட மாணவி இது எனக்கு சிறந்த ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. இது மேலும், பல்வேறு விருதுகளை பெற ஊக்கமளிப்பதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News