முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தால் நலம் பெற்ற பயனாளிகள் முதல்-அமைச்சருக்கு நன்றி
- 1,60,144 நபர்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது.
- 4 பேருக்கு முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை சிறந்த முறையில் செய்யப்பட்டு தற்பொழுது நல்ல நிலையில் உள்ளனர்.
ஊட்டி,
ஊட்டி அரசு மருத்துவ–மனையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம், முதுகு தண்டுவடம் சிகிச்சை மேற்கொண்டவர்களிடம் கலெக்டர் அம்ரித் கலந்துரையாடினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 1,60,144 நபர்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது.
முன்பு முதுகு தண்டுவலியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற கோவை, கேரளாவுக்கு சென்று வந்தனர்.
கடந்த சில மாதங்களில் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முடநீக்கியல் துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் முழுவதுமாக எந்தவித கட்டணமும் இல்லாமல் நீலகிரியை சேர்ந்த 4 பேருக்கு முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை சிறந்த முறையில் செய்யப்பட்டு தற்பொழுது நல்ல நிலையில் உள்ளனர்.
முதுகு தண்டு வலி அதிகமாக காணப்படும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுமக்களுக்கு இதுபோன்ற சிகிச்சை ஊட்டி அரசு மருத்துவமனையில் கிடைப்பது ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
மேலும், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 3 மணி நேரத்திற்குள் ஆண்டிபிளேஸ்" என்ற மருந்தினை செலுத்த வேண்டும். வெளியில் இந்த மருந்தின் விலை ரூ.40 ஆயிரம் ஆகிறது. ஆனால் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இம்மருந்தானது இலவசமாக அரசு மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.
இதுபோன்ற பல்வேறு சிகிச்சைகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளி சரோஜா என்பவர் கூறியதாவது:-
தெரிவித்ததாவது:-
நான் நொண்டிமேடு ஓபார்டு பகுதியில் வசித்து வருகிறேன். நான் முதுகு தண்டுவட பாதிப்பால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தேன். இதற்கு ஊட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டேன்.
அங்கு எனக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்ப ட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டதால் விரைவாக குணமடைந்து வீடு திரும்பினேன். இத்திட்டத்தினை செயல்படுத்திய முதல்- அமைச்சருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
பயனாளி கிருஷ்ணமூர்த்தி கூறும்போது,
நான் கக்குச்சி இந்து நகர் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு முதுகுதண்டு வட பாதிப்பு ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு வந்தேன். இதற்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டேன். அங்கு எனக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ப்பட்டது. இதில் குணமடைந்து விரைவில் வீடு திரும்பினேன்.
இதனை செயல்படுத்திய முதல்-அமைச்சருக்கு நன்றி என தெரிவித்தார்.
இதில், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, முடநீக்கியல் துறை இணை பேராசிரியர் அமர்நாத், முட நீக்கியல் துறை மருத்துவர்கள் லோகராஜ், ஜெய்கணேஷ் மூர்த்தி, இயன்முறையியல் மருத்துவர் பிரமிளா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.