உள்ளூர் செய்திகள்

ஆத்தூர் அருகே முட்டல் ஏரியில் விசைப்படகு இயக்கம் 5 நாட்களில் 1228 பேர் சவாரி

Published On 2022-08-18 10:26 GMT   |   Update On 2022-08-18 10:26 GMT
  • மோட்டார் படகு பழுதால் கடந்த 4 மாதமாக படகு சவாரி நிறுத்தப்பட்டது.
  • கடந்த ஜூன் மாதம் புதுச்சேரியிலிருந்து ரூ.7 லட்சம் செலவில் மேற்கூரை வசதியுடன் கூடிய விசைப்படகு வாங்கப்பட்டது .

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்வராயன் மலை அடிவாரத்தில் முட்டல் கிராமம் உள்ளது. அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்ய ,வனப்பகுதியில் புள்ளிமான், காட்டெருமை, காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட விலங்கு, பறவைகளை பார்வையிட ஆனைவாரி நீர்வீழ்ச்சி ரசிக்க ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர் .

மோட்டார் படகு பழுதால் கடந்த 4 மாதமாக படகு சவாரி நிறுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் புதுச்சேரியிலிருந்து ரூ.7 லட்சம் செலவில் மேற்கூரை வசதியுடன் கூடிய விசைப்படகு வாங்கப்பட்டது . இதில் என்ஜின் பொருத்தப்பட்டு கடந்த 13-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது .

அதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக சென்று வருகின்றனர். ஏரியை ரசிக்க ஒரே நேரத்தில் 15 பேர் அமர்ந்து செல்லும்படி விசைப்படகு இயக்கப்படுகிறது.

கடந்த 13-ந் தேதி 225 பேர், 16-ந் தேதி 409 பேர் ,15-ந் தேதி 361 பேர், 16-ந் தேதி 123 பேர் ,17-ந் தேதியான நேற்று 110 பேர் என 5 நாளில் 1228 பேர் சவாரி சென்றுள்ளனர். பெரியவர்களுக்கு ரூ.50, சிறுவர்களுக்கு ரூ.20 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இது தவிர ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் கனிசமான அளவில் தண்ணீர் வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

Tags:    

Similar News