உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் உதவித்தொகை பெற தபால் நிலையத்தில் வங்கி கணக்கு

Published On 2023-03-22 15:41 IST   |   Update On 2023-03-22 15:41:00 IST
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவ இன மாணவ, மாணவிகளுக்கு 2022 - 2023-ம் கல்வி ஆண்டில் ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
  • இதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பண பரிமாற்றம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ள தாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை கல்வி பயின்று வரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவ இன மாணவ, மாணவிகளுக்கு 2022 - 2023-ம் கல்வி ஆண்டில் ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பண பரிமாற்றம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற, தபால் துறையின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைந்து, அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்க ளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி மாணவர்கள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மட்டு மில்லாமல் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News