உள்ளூர் செய்திகள்

பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்.

சியாமளாதேவி அம்மன் கோவிலில் பால்குட திருவிழா

Published On 2023-05-28 15:24 IST   |   Update On 2023-05-28 15:24:00 IST
  • சியாமளா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.‌
  • விழாவில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டு இரவில் அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது.

தஞ்சாவூா்:

தஞ்சாவூர் ரெட்டிபா ளையம் சக்கராம்பேட்டை பகுதியில் சியாமளா தேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பால்குடம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று 36-ம் ஆண்டு பால்குடை விழா நடைபெற்றது.

இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்தும், அலகு காவடி எடுத்தும், அலகு குத்தியும் குளக்கரையில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டனர்.

பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை சென்றடைந்தனர். பின்னர் சியாமளா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.

இன்று இரவில் அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது.

விழாவில் வருகின்ற 30 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பா டுகளை நாட்டாமைகாரர்கள், கிராமவாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News