உள்ளூர் செய்திகள்

அமைச்சர் ராமச்சந்திரன் மருமகனுக்கு முன் ஜாமீன்-கோத்தகிரி கோர்ட்டு உத்தரவு

Published On 2023-04-21 08:54 GMT   |   Update On 2023-04-21 08:54 GMT
  • வனப்பகுதியில் விதிகளை மீறி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைத்ததாகக் கூறப்படுகிறது.
  • கோத்தகிரி வனத்துறையினர் சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

குன்னூர்,

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகன் சிவகுமார். கீழ் கோத்தகிரி மேநாடு பகுதியில் உள்ள இவரது எஸ்டேட்டுக்குச் செல்லும் வழியில் வனப்பகுதியில் விதிகளை மீறி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைத்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக எஸ்டேட் மேலாளர் பாலமுருகன், ரோடு ரோலர் மற்றும் பொக்லைன் டிரைவர்களான உமர் பரூக், பங்கஜ்குமார் சிங் ஆகிய 3 பேர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிந்திருந்தனர்.

இந்த நிலையில், சாலை விரிவாக்கப் பணியின்போது தான் அந்த இடத்தில் இல்லை என்றும், தனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என்றும், தோட்ட உரிமையாளரும் சுற்றுலாத் துறை அமைச்சரின் மருமகனுமான சிவகுமார் வனத்துறையினரின் விசாரணையில் விளக்கம் அளித்திருந்தார்.

கோத்தகிரி வனத்துறையினர் சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்தநிலையில் கோத்தகிரி நீதிமன்றத்தில் சிவகுமார் நேரில் ஆஜராகி முன்ஜாமீன் கோரினார். அவருக்கு கோத்தகிரி நீதிபதி வனிதா முன்ஜாமீன் வழங்கினார்.

Tags:    

Similar News