உள்ளூர் செய்திகள்

அன்னபட்சி வாகனத்தில் பாகம்பிரியாள் அம்மனும், திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்தில் பெருமாளும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தூத்துக்குடி ரதவீதிகளில் அன்னபட்சி வாகனத்தில் காட்சி அளித்த பாகம்பிரியாள் அம்மன்

Published On 2022-10-15 08:58 GMT   |   Update On 2022-10-15 08:58 GMT
  • தூத்துக்குடியில் மிகவும் பழமையான பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு கடந்த 12-ந்தேதி மகாகணபதி ஹோமத்துடன் கொடி ஏற்றப்பட்டது.
  • ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள் பித்தளை சப்பரம், கிளி வாகனம், அன்னபட்சி வாகனத்தில் ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் மிகவும் பழமையான பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு கடந்த 12-ந்தேதி மகாகணபதி ஹோமத்துடன் கொடி ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள் பித்தளை சப்பரம், கிளி வாகனம், அன்னபட்சி வாகனம் மற்றும் பல்வேறு வாகனத்தில் ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

ஐப்பசி திருக்கல்யாண உச்ச நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அதை தொடர்ந்து சனிக்கிழமை இரவு திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது,

நேற்று இரவு அம்பாள் அன்னபட்சி வாகனத்தில் ரதவீதிகளில் வலம் வந்து காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் தமிழ் செல்வி மற்றும் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், கோவில் முன்னாள் அறங்காவலர்கள் கோட்டு ராஜா,கந்தசாமி,சோமசுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News