குமரிக்காடு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள பாகுபலி யானை
- 4-வது நாளாக யானையை தேடும் பணி நடக்கிறது.
- யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மேட்டுப்பா ளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றை யானை சுற்றி திரிகிறது. இதனை பொதுமக்கள் செல்லமாக பாகுபலி என பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.
இந்த யானை அடிக்கடி ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. கடந்த சில தினங்க ளுக்கு முன்பு பாகுபலி யானை வாயில் காயத்துடன் சுற்றியதை வனப்பணி யாளர்கள் பார்த்தனர்.
இதபற்றிய தகவல் அறிந்ததும் யானையின் காயத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறை யினர், அந்த யானையை பிடிக்க முடிவு செய்தனர்.
வனத்துறை 2 குழுக்கள் அமைத்தும், மோப்பநாய்கள் உதவியுடன் யானையை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் பாகுபலி யானையின் வாயில் உள்ள காயத்தின் தன்மையை அறிவதற்காவும், அதற்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கா கவும் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்து றையினர் திட்டமிட்டனர்.
இதற்கு உதவியாக முதுமலை தெப்பக்காடு முகாமில் இருந்து வசீம், விஜய் ஆகிய 2 கும்கி யா னைகள் வரழைக்கப்பட்டன.
அந்த யானைகள் உதவியுடன் பாகுபலி யானையை தேடும் பணியை வனத்துறையினர் மேற்கொ ண்டு வருகிறார்கள்.
இன்று 4-வது நாளாக யானையை தொடர்ந்து தேடும் பணியில் வனத்து றையினர் ஈடுபட்டனர்.
தற்போது யானையானது நெல்லித்துறை வனப்பகுதிக்குட்பட்ட குமரிக்காடு பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனை அறிந்ததும் வனத்துறையினரும், கால்நடை மருத்துவ குழுவினரும் அங்கு விரைந்துள்ளனர்.
அங்கு யானையின் நிலைமையை கண்காணித்து அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். யானை சரியான இடத்திற்கு வந்தவுடன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.