- ஊரக பணி அனுபவத்திட்டத்தில் கிராமப்புற விவசாயிகளின் அனுபவத்தைக் கற்று வருகின்றனர்.
- தற்செயல் செலவுகளை சந்திக்கப் பயன்படுகிறது. விவசாயிகள் ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை பட்டப்படிப்பு இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 11 பேர் கொண்ட குழுவினர் முகாமிட்டு, ஊரக பணி அனுபவத்திட்டத்தில் கிராமப்புற விவசாயிகளின் அனுபவத்தைக் கற்று வருகின்றனர்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் அமைந்துள்ள மாணிக்கனூர் கிராமத்தில், கிசான் கடன் அட்டை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அப்போது, இந்த அட்டை விவசாயக் கடனில் ஈடுபட்டுள்ள அனைத்து வங்கிக் கிளைகளும் வழங்குகின்றன.
இது விவசாயிகளின் உற்பத்தி கடன் தேவை, சாகுபடி செலவுகள் மற்றும் தற்செயல் செலவுகளை சந்திக்கப் பயன்படுகிறது. விவசாயிகள் ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம்.
கடன் 3ஆண்டு வரை கிடைக்கும். பயிர் சாகுபடிக்குப் பிறகு ஒரு முறையில் திருப்பிச் செலுத்தலாம். இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நிரந்தர இயலாமை மற்றும் இறப்பு நேர்த்தால் ரூ-.50 ஆயிரம் வரை காப்பீடும், இடர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரையும் வழங்கப்படுகிறது.
செயல்திறன் மற்றும் தேவைகளைப் பொறுத்து கடன் வரம்புகளை மேம்படுத்தலாம் என்று எடுத்துரைத்தனர்.