உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி நடந்தது.

வேளாங்கண்ணியில், விழிப்புணர்வு பேரணி

Published On 2023-10-16 09:54 GMT   |   Update On 2023-10-16 09:54 GMT
  • விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
  • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி மற்றும் லயன்ஸ் கிளப், ரோட்டரி சங்கம், இன்னர்வீல் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து வேளாங்கண்ணியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா தொடங்கி வைத்தார். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி பேருந்து நிலையம், பேராலயம், கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு,

உத்திரமாதா கோவில் தெரு, செபஸ்தியார் நகர் வழியாக பள்ளியில் நிறைவடைந்தது இந்த பேரணியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அவற்றின் பாதிப்புகள், எவ்வாறு தடுப்பது, சுகாதாரத்தை பேணிக்காப்பது, உணவு பழக்க வழக்கங்கள் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

மேலும் செல்லும் வழியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News