உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

சீர்காழியில் விழிப்புணர்வு கூட்டம்

Published On 2023-09-13 09:58 GMT   |   Update On 2023-09-13 09:58 GMT
  • மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது சட்டப்படி குற்றமாகும்.
  • மனித கழிவுகளை அகற்ற வேண்டுமானால் தானியங்கி எந்திரம் மூலம் அகற்ற வேண்டும்.

சீர்காழி:

சீர்காழி நகராட்சி சார்பில் சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அறிவுடையநம்பி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகர மன்ற தலைவர் துர்காராஜசேகரன் கலந்து கொண்டு பேசுகையில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றக் கூடாது. இது சட்டப்படி குற்றமாகும். மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளினால் அவர்களுக்கு பிணையில் வர முடியாமல் இரண்டு முதல் ஐந்தாண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

சீர்காழி நகர் பகுதியில் மனித கழிவுகளை அகற்ற வேண்டுமானால் தானியங்கி இயந்திரம் மூலம் அகற்ற வேண்டும். சீர்காழி நகராட்சியில் பதிவு செய்த ஒப்பந்தக்தாரர்களைக் கொண்டு தான் இயந்திரம் மூலம் மனித கழிவுகளை அகற்ற வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், டெங்கு ஒழிப்பு பணி மேற்பார்வையாளர் அலெக்ஸ், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News