மணலூர்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மணலூர்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு
- 10-ம் வகுப்பு தேர்வு முடிந்த மாணவிகளுக்கு தேர்வு வெற்றி தோல்விகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
- 1098 மற்றும் 181 எண்கள் குறிக்கும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் தலைமை போலீசார்கள் தாமோதரன், கோகிலா மற்றும் போலீசார் கலந்து கொண்டு மணலூர்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு கருதியும், குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்தும் மேலும் சாலை விதிகள் பயன்படுத்துவது குறித்தும் 10-ம் வகுப்பு தேர்வு முடிந்த மாணவிகளுக்கு தேர்வு வெற்றி தோல்விகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
முன்னதாக மணலூர்பேட்டை காவல் துறையினர் சார்பில் செல்லங்குப்பம் கிராமத்தில் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கருதியும் குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்து போதை பொருள் தடுப்பு மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் காவல் உதவி செயலி பயன்படுத்துவது குறித்தும் சாலை விதிகள் குறித்தும் மேலும் 1098 மற்றும் 181 எண்கள் குறிக்கும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.