உள்ளூர் செய்திகள்

திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளரும், சமூக சேவகருமான செந்தில்குமார்.

புத்தக திருவிழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம்

Published On 2023-03-30 09:19 GMT   |   Update On 2023-03-30 09:19 GMT
  • திருவாரூர் மாவட்டத்தில் புத்தக திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கி வருகிற (ஏப்ரல்) 2-ந்தேதி உடன் முடிவடைகிறது.
  • தினமும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள், பொதுமக்ககள் பலர் கலந்து கொள்கின்றனர்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டத்தில் புத்தக திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கி வருகிற (ஏப்ரல்) 2-ந்தேதி உடன் முடிவடைகிறது.

இதில் சுமார் 60 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் புத்தக வெளியீட்டாளர்களின் படைப்புகள் காட்சி படுத்தப்பட்டு சலுகை விலையில் விற்பனை நடைபெற்று வருகிறது.

மேலும், மகளிர் சுயஉதவி குழுக்களின் தயாரிப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

தினமும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்ககள் பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், இதில் மக்கள் பங்கேற்கும் விதமாக திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளரும், சமூக சேவகருமான செந்தில்குமார் கடந்த ஒரு வாரமாக திருத்துறைப்பூண்டி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மைக் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.

இவரது விழிப்புணர்வு மூலம் இதுவரை 2 ஆயிரத்து 542 இளைஞர்கள் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு சுமார் ரூ.30 ஆயிரம்-க்கு புத்தகம் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை சிறை துறைக்கு தானமாக வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

இவரது இந்த பணியை பாராட்டி பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News