உள்ளூர் செய்திகள்

இயற்கை விவசாயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்

Published On 2023-03-15 09:16 GMT   |   Update On 2023-03-15 09:16 GMT
  • இயற்கை வேளாண்மை சாகுபடி செய்வதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து எடுத்து கூறினார்.
  • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி சங்கம் மற்றும் ஆர்விஎஸ் வேளாண்மை கல்லூரியில் இறுதிஆண்டு படிக்கும் மாணவிகள் இணைந்து நடத்திய இயற்கை முறையில் வேளாண் சாகுபடி செய்வது மற்றும் சிறு தானியங்கள் உபயோகம் மற்றும் உற்பத்தி செயவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

விவேகானந்தா தொண்டு நிறுவனச் செயலாளர் தங்க.கண்ணதாசன் வழிகாட்டுதலுடன் கோவில் தேவாராயன்பேட்டை, அன்னுகுடி கிராமங்களில் நடைபெற்றது.

இதில் ஆர்விஎஸ் கல்லூரி மாணவிகள் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் களப்பணியாளர்கள் விவசாயிகளை நேரடியாக சந்தித்து இயற்கை வேளாண்மை சாகுபடி செய்வதால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும், அவற்றின் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினார்.

மேலும் சிறுதானியங்கள் ஏன் பயிரிட வேண்டும், அவற்றின் தொழில் நுட்பங்கள், சரி விகித உணவு வகைகள், சிறுதானியங்கள் சந்தை வாய்ப்புகள் பற்றி கிராமப்புற பெண்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் வேளாண் கல்லூரி முன்னோடி மாணவி ஜனோ அபிஷா தலைமையில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள், விவேகானந்தா சமூக கல்வி சங்கத் தலைவர் தேவராஜன், சங்க உறுப்பினர் சிவக்குமார் களப்பணியாளர் புனிதவள்ளி மற்றும் மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News