உள்ளூர் செய்திகள்

பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம்- கலை நிகழ்ச்சி

Published On 2022-11-26 07:37 GMT   |   Update On 2022-11-26 07:37 GMT
  • பரதநாட்டியம், நாட்டுப்புற பாடல்கள், தேசிய பாடல்கள், கரகாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
  • சிறுவர்களுக்கான சிறார் திரைப்படம் திரையிடுதல்.

மதுக்கூர்:

தமிழகமெங்கும் மாற்றுத்திற னாளி–களுக்கான விழிப்புணர்வு முகாம் பல்வேறு வகையில் நடத்தப்பட்டு வருகின்றது.

இதனை அடுத்து தமிழக பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அறிவுரைப்படி இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் மாணவர்களின் மாற்றுத்திறனாளிக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகின்றது.

இதனை அடுத்து விழிப்புணர் பேரணி, இணைவோம் மகிழ்வோம் என பல்வேறு வகையில் நடைபெற்று வந்தது.

இதன்படி நேற்று 25-ந்தேதி மதுக்கூர் அருகே மதுக்கூர் வடக்கு ஊராட்சியில் உள்ள வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதன்படி பரதநாட்டியம், நாட்டுப்புற பாடல்கள், தேசிய பாடல்கள், கரகாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகள் இன்று இனிய முறையில் நடைபெற்றது.

இந்த கலை நடன நிகழ்ச்சிக்கு மதுக்கூர் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜமீலா அவர்கள் தலைமையேற்று கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கம், ஆசிரியர் பயிற்றுநர்கள் வீரப்ப ராஜா, பிரகாஷ் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்கள் இருதயராஜ், புஷ்பா மற்றும் இயன் முறை மருத்துவர் பழனிவேல் ஆகியோர் இதற்கு ஆன ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மேலும் விளையாட்டுப் போட்டிகள் சிறுவர்களுக்கான சிறார் திரைப்படம் திரையிடுதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்பதை இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News