உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கொடைக்கானலில் இணையதள குற்றங்கள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு

Published On 2022-11-24 10:47 IST   |   Update On 2022-11-24 10:47:00 IST
  • அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு சைபர்கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
  • சைபர் கிரைம் போலீசார் மாணவிகளுக்கு இணையதள குற்றங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு சைபர்கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் மாணவிகளுக்கு இணையதள குற்றங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

மேலும் மோசடியில் ஈடுபடுபவரிடம் சிக்கி கொள்ளாமல் தவிர்ப்பது, காவல்துறையின் இணையதளம் மற்றும் இலவச புகார் எண்ணுக்கு உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என தெளிவுபடுத்தினர். இணைய தளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தங்களது நிகழ்வுகளை பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும் சம்பந்தமில்லாத, அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு வீடியோ சாட் செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News