உள்ளூர் செய்திகள்

நுகர்வோர் சார் அம்சம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு

Published On 2022-12-25 14:33 IST   |   Update On 2022-12-25 14:33:00 IST
  • ப்ளூ மவுண்டன் நுகர்வோர் அமைப்பின் சார்பில் தேசிய நுகர்வோர் தினம் கொண்டாடப்பட்டது.
  • இதற்கான ஏற்பாடுகளை சிவகிருஷ்ணா, விபின் குமார் மற்றும் கிரேஸி ஆகியோர் செய்தனர்.

அரவேணு,

ப்ளூ மவுண்டன் நுகர்வோர் அமைப்பின் சார்பில் தேசிய நுகர்வோர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வராஜ், செயலாளர் முகமது சலீம், பொருளாளர் மரியம்மா முன்னிலை வகித்தனர்.

இதில் கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நுகர்வோர் சார் அம்சம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்.

இதில் துணை தலைவர் ஜெயந்தி, இணை செயலாளர் கண்மணி, செயற்குழு உறுப்பினர்கள் லிலிதா, சங்கீதா, ராதிகா, தேவி, ராமகிருஷ்ணன், விபின்குமார், சிவகிருஷ்ணா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பீட்டர் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சிவகிருஷ்ணா, விபின் குமார் மற்றும் கிரேஸி ஆகியோர் செய்தனர்.

Tags:    

Similar News