இயற்கை விவசாயம் குறித்து மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு
- விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தினர்.
- அவரை வெண்டை, கத்திரிக்காய் போன்ற காய்கறி தோட்டத்தை வேளாண் புல மாணவிகள் அமைத்து கொடுத்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருதே உள்ள செம்மங்குடி கிராமத்தில் தங்கி பயிற்சி வரும் வேளாண் புல இறுதியாண்டு மாணவிகள் (குழு எண் -14) அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு "இயற்கை விவசாயம்" குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் , வேளாண் புல மாணவிகள் மகாலட்சுமி, , சுஷ்மிதா, சுருதி, சுகிர்தா, சுமித்ரா, ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
வேளாண் புல மாணவிகள் செம்மங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தினர்.
இப்போது வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதேபோல் செம்மங்குடியில் உள்ள முதியோர் இல்லத்தில் அவரை வெண்டை, கத்திரிக்காய் போன்ற காய்கறி தோட்டம் வேளாண் புல மாணவிகள் அமைத்துக் கொடுத்தனர்.