உள்ளூர் செய்திகள்

பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை வழங்கி பாராட்டினார்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

Published On 2023-02-20 15:32 IST   |   Update On 2023-02-20 15:32:00 IST
  • வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
  • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேரு இளைஞர் மையம், தருமபுரி மற்றும் ரங்காபுரம் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் இளைஞர் நற்பணி சங்கம் சார்பில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

டக்க நிகழ்ச்சியில் பென்னாகரம் துணை காவல் கண்காணிப்பாளர் இமயவரம்பன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நேரு இளைஞர் மையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் வரவேற்று பேசினார்.

பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் சின்னபள்ளத்தூர் அரசு பள்ளி தலைமையாசிரியர் பழன,உடற்கல்வி ஆசிரியர்கள் சம்பத்குமார், ரங்காபுரம் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் இளைஞர் நற்பணி சங்கம் தலைவர் முருகன,ஞானராஜ் முனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News