உள்ளூர் செய்திகள்

அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிப்பு வட்டம் தொடக்க விழா நடந்தபோது எடுத்த படம்.

அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில் அவ்வை-அதியமான் படிப்பு வட்டம் தொடக்கம்

Published On 2022-11-09 15:13 IST   |   Update On 2022-11-09 15:13:00 IST
  • அவ்வை- அதியமான் படிப்பு வட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
  • மாதம் தோறும் புத்தக அறிமுக நிகழ்வுகள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தருமபுரி,

தகடூர் புத்தகப் பேரவை சார்பில் தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அவ்வை- அதியமான் படிப்பு வட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு உதவி தலைமை ஆசிரியர் ஜோதி லதா தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜலஜா

ரமணி வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்வில் சுவாமி விவேகானந்தர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகிய ஆளுமைகள் குறித்தும், குழந்தைகளுக்கான கதைகள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஸ்விட்சர்லாந்து மாணவி கிரெட்டா துன்பெர்க் குறித்த புத்தகங்களை மாணவிகள் சிறப்பாக அறிமுகப்படுத்திப் பேசினர்.

தகடூர் புத்தகப் பேரவையின் செயலாளர் முன்னாள் எம்.பி.செந்தில் சிறப்புரையாற்றினார். பேரவையின் தலைவர் சிசுபாலன், பேரவையின் முன்னணி செயல்பாட்டாளர் அறிவுடை நம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.உடற்கல்வி ஆசிரியர் அருள் செல்வி நன்றி கூறினார்.

நிகழ்வில் மாதம் தோறும் புத்தக அறிமுக நிகழ்வுகள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

Tags:    

Similar News