உள்ளூர் செய்திகள்
ஆவடி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
- வீட்டில் இருந்த மின்வயர் அறுந்து இருந்ததாக தெரிகிறது. இதனை நாகராஜ் சரி செய்ய முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
- திருநின்றவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநின்றவூர் அடுத்த நடுகுத்தகை, அருந்ததி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(வயது33). பெயிண்டர். இவர் நேற்று மாலை வீட்டுக்கு வந்த போது மின்சாரம் இல்லை. வீட்டில் இருந்த மின்வயர் அறுந்து இருந்ததாக தெரிகிறது. இதனை நாகராஜ் சரி செய்ய முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு திருவள்ளுவர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.