உள்ளூர் செய்திகள்

‘திருத்துறைப்பூண்டியில் திருவையாறு’ இசை நிகழ்ச்சி நடந்தது.

பிறவிமருந்தீஸ்வரர் கோவிலில் மங்கள இசை நிகழ்ச்சி

Published On 2022-12-17 07:46 GMT   |   Update On 2022-12-17 07:46 GMT
  • அஸ்வினி நட்சத்திர பரிகார தலமாக விளங்குகிறது.
  • 100 தவில், 100 நாதஸ்வர கலைஞர்கள் கலந்துகொண்டு மங்கள இசை வாசித்தனர்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற பிறவிமருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது

1000-ம் ஆண்டுக்குமேல் பழமையான கோவிலாகும். இந்த கோவில் அஸ்வினி நட்சத்திர பரிகார தலமாகவும் விளங்குகிறது. மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு தியாகராஜர் சன்னதி எதிரில் 'திருத்துறைப்பூண்டியில் திருவையாறு' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 100 தவில், 100 நாதஸ்வர கலைஞர்கள் கலந்துகொண்டு மங்கள இசை வாசித்தனர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News