உள்ளூர் செய்திகள்

பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரனை போலீசார் அழைத்து வந்த காட்சி. 

உதவி ஜெயிலர் குடும்பத்தை தீ வைத்து எரிக்க முயற்சி: பிரபல ரவுடி தனசேகரனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

Published On 2022-09-21 07:46 GMT   |   Update On 2022-09-21 07:46 GMT
  • வீட்டிற்கு தீ வைத்ததாக சிறை வார்டன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
  • இவ்வழக்கை விசாரித்தவர் கடலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வனஜா.

கடலூர்:

கடலூர் கேப்பர் மலை மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் கடந்த மாதம் 28 - ந்தேதி மர்ம கும்பல் தீ வைத்து குடும்பத்துடன் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் வீட்டிற்கு தீ வைத்ததாக சிறை வார்டன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து எண்ணூர் தனசேகரனிடம் இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் மூன்று நாட்கள் போலீஸ் காவல் கேட்டு கடலூர் முதுநகர் போலீசார் கடலூர் நீதி மன்றத்தில் மனு அளித்தனர். இதற்காக மத்திய சிறையில் இருந்து கைதி பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரனை போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் இவ்வழக்கை விசாரித்த கடலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வனஜா, எண்ணூர் தனசேகரனை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News